உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தைகள், கணவர், உறவுக்காக வாழும் ஜீவன் மனைவியை போற்றும் மனைவி நல வேட்பு விழா

குழந்தைகள், கணவர், உறவுக்காக வாழும் ஜீவன் மனைவியை போற்றும் மனைவி நல வேட்பு விழா

திண்டுக்கல்: நட்பு மிக சிறந்தது பயனுடையது. இதிலும் கணவன் மனைவி நட்பை சாதாரணமாக சொல்ல முடியாது. இத்தகைய நட்பு எல்லாவிதத்திலும் மேலானதாகும். இந்த உயர்வான நட்புக்கு இலக்கணமாக மனைவிகளுக்காக கொண்டாடப்படுவது தான் மனைவியர் தினம். இது கேட்பவர்களுக்கு புதிதாக இருக்கும் . ஆயிரம் அர்த்தம் பொதிந்த இந்த நாள் இன்றைய தலைமுறைக்கு முக்கிய தேவை என்பதை திண்டுக்கல் அறிவுத்திருக்கோயி லில் நடந்த மனைவியர் விழா எடுத்துக்கூறும் விதமாக அமைந்தது. கணவன், மனைவி ஒருவரையொருவர் அருள் பார்வையால் முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள் சிறு, சிறு குற்றம் குறைகள் இருந்தாலும் அவைகளை நீக்கி மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என வார்த்தைகள் இல்லாமல் கண்களால் கடத்தும் அழகியலை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. மனைவியர் தின விழா குறித்து பேசியவர்களின் கருத்துகள் இதோ... நன்றி மறந்த செயல் தாமோதரன், நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில்: உலகம் முழுவதும் மனைவியர் தின விழா மத, இன, மொழி வேறுபாடு கடந்து வேகமாக பரவி வருகிறது. அதற்கு தற்கால மீடியாக்களும் பேருதவி புரிகின்றன. குடும்ப உறவுகளில் பெற்றோர் தினம், குழந்தைகள் தினம், கணவர் தினம் என்று சிறப்பு செய்து கொண்டாடும் போது ஒரு உறவு விடுபட்டுள்ளது. குடும்பத்திற்கு விளக்காக திகழும் மனைவியரை மறப்பது நன்றி மறந்த செயல் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. உலக மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண் ஆற்றலை மதித்து வெளிக்கொணராத சமுதாயம் வளர்ச்சி பெற இயலாது. பெண்மையின் சிறப்பை உலகறிய செய்ய வீட்டுக்கு வந்த மருமகளை மதித்துப் போற்ற வேண்டும் என்ற நோக்கில் மனைவியர் தினவிழா கொண்டாடப்படுகிறது. சோர்வுறும் போதும் அறிவுரை பழனிசாமி, செயலளாளர்: வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் பிறந்தநாளை மனைவியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. வீட்டிற்கு வந்த மருமகள், பிற்காலத்தில் தாரமாகவும், தாயாகவும், கணவனுக்கு அறிவுரை தரும் அமைச்சராகவும், குழந்தைக்கு நல் ஆசனாகவும் இருக்கிறார். வாழ்க்கை துணைவர் சோர்வுறும் போதும் அறிவுரை தருகிறார். இதுபோல் பல அவதாரங்கள் எடுப்பதை, சிறப்பாக நடத்துகின்றார். அத்தகைய மனைவியை போற்றும் வகையில் மனைவி நல வேட்பு விழா நடைபெறுகிறது. இதன்மூலம் குடும்பத்தில் அமைதி நிலைக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கமாகும் . குடும்பத்தின் துாணாக பாலசுந்தர், மண்டல செயலாளர்: பூவுலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மனைவியருக்கான விழா கொண்டாடப்பட வேண்டும் என்று வேதாத்திரி மகரிஷி எண்ணினார். அது இன்று நனவாகி ஒவ்வொரு அறிவுத்திருக்கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. மிக சிறந்த விழாக்களில் நம்மீதும் நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் அன்பும், பாசமும், நேசமும், வைத்துள்ள குடும்பத்தின் துாணாக விளங்கி கொண்டுள்ள மனைவியருக்கான விழா தான் மனைவி நல விழா ஆகும் . அன்பு, பாசம், நேசம் வளர துணை பிரசாந்தி, ஸ்கை யோகா ஆசிரியர்: மனைவியின் பெருமைகளையும், தியாகத்தினையும், சிறப்புகளையும் போற்றும் விதமாக மனைவி தின விழாவாக கொண்டாடி வருகிறோம். பெண்களின் பாதுகாப்பு வேண்டியும், அவர்களை அனைவரும் மதிக்கத்தக்கதை உணர்த்தியும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் கணவன் - மனைவி இடையே உள்ள அன்பு, பாசம், நேசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம், இவை வளர்வதற்கு துணை புரிகிறது . காதலியாக, தோழியாக, தாயாக... சிவக்குமார், சிறப்பு விருந்தினர்: போற்றுதல், பாராட்டுதலுக்கு உரியவர் மனைவி. மனைவியை போற்றுவத பெரிய விஷயம். எல்லோரும் நினைப்பது போல் ஆண்கள் பலசாலி இல்லை. அவர்களால் சம்பாதிக்க மட்டுமே முடியும். சிறு கஷ்டம் வந்தால் அதை அவர்களால் தாங்க முடியாது. ஆண், பெண் சமமானவர்கள்தான். பெண்கள் நல்ல தோழர்களாக இருப்பர். மனைவி என்பவள் துனைவியாக, காதலியாக, தோழியாக, தாயாக, ஆறுதலாக, அன்பானவளாக என அனைத்துமாக இருக்கிறார். நம்மை உற்சாகப்படுத்தும் முதல் நபர் மனைவி தான். குழந்தைகள், கணவன், உறவுகள் என சுற்றத்தாரை நினைத்தே வாழும் ஜீவன் மனைவி. அவர்களை விட அதிக வலிமையானவர்களை பார்க்கமுடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை