கொடை வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்
கொடைக்கானல் : கொடைக்கானல் வனப்பகுதியில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.பெருமாள் மலை பாரதி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் 53. இவர் பாம்பார்புரம் எதிரே உள்ள வனப்பகுதியில் கல்பாசம் , இலை, தலைகளை சேகரிக்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடினர். பாம்பார்புரம் வனப்பகுதியில் பின் தலையில் காயம் அடைந்த நிலையில் பழனியம்மாள் இறந்து கிடந்தார். பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.