உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில் மீது ஏறி மின்கம்பியை பிடித்த குமரி வாலிபர் பலி

ரயில் மீது ஏறி மின்கம்பியை பிடித்த குமரி வாலிபர் பலி

திண்டுக்கல்:ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு டீசல் ஏற்றி வந்த டேங்கர் ரயில் செப். 29 இரவு திண்டுக்கல் வந்தது. முதல் நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 35 வயது வாலிபர் ரயில் மீது ஏறி உயர்அழுத்த மின் கம்பியை பிடித்ததில் உடல் கருகியது. மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். போலீஸ் விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை சேர்ந்த தினிஷ் 35 , என்பதும் பட்டதாரியான இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சில வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் ரயில் மூலம் திண்டுக்கல் வந்து தற்கொலை செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ