உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரிசியில் அப்துல் கலாம் ஓவியம்

அரிசியில் அப்துல் கலாம் ஓவியம்

தொப்பம்பட்டி : தொப்பம்பட்டி அருகே தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அரிசியில் அவரது ஓவியத்தை பத்து அடி உயரம் 16 அடி அகலத்தில் வரைந்துள்ளன.. 15 கிலோ அரிசியை பயன்படுத்தி 16 மாணவர்கள் வரைந்துள்ளனர். இவர்களை பள்ளித் தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரட்சுமராஜ், உதவி தலைமை ஆசிரியர் தெய்வநாயகி, தமிழ் ஆசிரியர் பொன்னுத்தாயி, ஓவியாசிரியர் விஜி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி