தலைமறைவு குற்றவாளி கைது
சாணார்பட்டி:-சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் குகன்ஈஸ்வரன் 31. இவர் மீது சாணார்பட்டி போலீசில் வழிப்பறி, திருட்டு என 5 வழக்குகள் உள்ளன. இவ்வழக்கு திண்டுக்கல் 3வது ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 6 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் நின்ற குகன் ஈஸ்வரனை கைது செய்தனர். இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.