மாநில யோகா போட்டியில் சாதனை
கள்ளிமந்தையம்:நீலாங்கவுண்டன்பட்டி விவேகானந்தா ஹிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 21 மாணவர்கள் திருச்செந்தூரில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டிகளில் உலக அளவிலான சாதனை படைத்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் பழனியம்மாள், பள்ளி முதல்வர் கவிதா, யோகா ஆசிரியர் சரண்யா, பேராசிரியர் ரஞ்சித் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.