உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கும்பாபிஷேகம் செய்தியுடன் சேர்க்கவும் ...

கோயில் கும்பாபிஷேகம் செய்தியுடன் சேர்க்கவும் ...

*ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்திநகர் உச்சிகாளியம்மன், முத்து மாரியம்மன் கோயிலில்நேற்று முன்தினம் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, காப்புக் கட்டுதளுடன் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை ,ஞான உலா நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்கள், உச்சிகாளியம்மன் ,முத்து மாரியம்மன் , பரிவார தெய்வங்களான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகருப்பணசுவாமிக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகளும் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.பி., வேலுச்சாமி, தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளைகாந்திநகர் ஊர்த்தலைவர் செந்தில்குமார், திருப்பணி குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ