உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வேடசந்தூர்: வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க., சார்பில், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பூத் நிர்வாகிகள் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, அமைப்பு செயலாளர் மருதராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்று பேசியதாவது: தேர்தல் பணிகளை முறைப்படி திட்டமிட்டு தொடங்க வேண்டும், தலைமைக்கும் பூத் முகவர்களுக்கும் இடையே நேரடி தொடர்பும், வலுவான இணைப்பும் இருக்க வேண்டும். வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி தான், ஆட்சி அமைக்கும் என்ற நிலை நீண்ட காலமாக உள்ளது. இது தமிழக அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்பதால், தேர்தல் பணிகளில் இப்போதிருந்தே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நகர செயலாளர் பாபு சேட் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை