உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வத்திபட்டியில் அ.தி.மு.க., கபடி போட்டி

வத்திபட்டியில் அ.தி.மு.க., கபடி போட்டி

நத்தம், : நத்தம் அருகே வத்திபட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டிகள் நடந்தது. 45-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில் முதல் பரிசை கோமனாம்பட்டி அணி , 2வது பரிசை பழநி பட்டாலியன் போலீஸ் அணி , 3-ம் பரிசை நத்தம்- அய்யாபட்டி அணி , 4-ம் பரிசை உலுப்பகுடி அணி பெற்றன. இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரிசு, கோப்பை , கேடயங்களை வழங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சின்னு, ஜெ பேரவை சுப்பிரமணி, ஜெயபாலன், தொழிலதிபர் அமர்நாத், ஜெ.பேரவை விஜயன், மாணவரணி அசாருதீன், நகர அவைத் தலைவர் சேக்ஒலி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, வழக்கறிஞரணி ராமநாதன், ஜெ பேரவை கண்ணன், பொருளாளர் மனோகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி