உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கன்னிவாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கன்னிவாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கன்னிவாடி: வன விலங்குகளால் சாகுபடி ,மனித உயிர்கள் பாதிப்பதை தடுக்க தவறிய வனத்துறை, கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறையால் சிகிச்சையில் நீடிக்கும் பின்னடைவு ஆகியவற்றை கண்டித்து ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கன்னிவாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாச்சலம், பேரூர் செயலாளர்கள் பாபு, முருகன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெயசீலன், மீனவரணி இணை செயலாளர் சின்னையா, முன்னாள் ஊராட்சி தலைவர் சூடாமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பெருமாள், மாணவரணி செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை