உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமிர்தா கல்விக் குழும மாணவர் சேர்க்கை

அமிர்தா கல்விக் குழும மாணவர் சேர்க்கை

திண்டுக்கல்: அமிர்தா கல்விக் குழுமத்தின் 21-வது பள்ளியானது திண்டுக்கல் - பழநி ரோட்டில் காமாட்சிபுரம் பிரிவில் புதிதாக அமைந்துள்ளது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்க விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாதா அமிர்தானந்தமயி மடத்தின் மூத்தத் துறவி சுவாமி இராமகிருஷ்ணானந்தபுரி தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி அமிர்த வித்யாலயம் பள்ளிகளின் தாளாளர் பக்திப்ரியாமிர்தபிராணா, கல்வி அலுவலர் முரளிதரன் பங்கேற்றனர். திண்டுக்கல் அறிவு திருக்கோயில் அறங்காவலர். தாமோதரன், மகாத்மா காந்தி கிராமப்புற தொழில் வளர்ச்சி கல்வி நிறுவன முதன்மை ஆலோசகர் ரவிக்குமார் கந்தசாமி, அம்மைய நாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் கலந்து கொண்டனர். புதுச்சேரி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி