உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்

சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்

பழநி: பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆறு நாள் போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து நாலாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில் கோலுான்றி தாண்டுதல் போட்டியில் 19 வயது பிரிவில் பாரத் வித்யா பவன் மெட்ரிக் பள்ளி மாணவர் ஹரிஷ் மூன்றாம் இடம் பிடித்தார். மாணவரை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர்கள் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் மோகன்ராஜ், ஆசிரியர்கள் சுரேந்திரன், காளீஸ்வரி, காயத்ரி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை