உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அண்ணா பல்கலை பாலியல் விவகாரம்: பாதியில் முடிந்த கூட்டம்

அண்ணா பல்கலை பாலியல் விவகாரம்: பாதியில் முடிந்த கூட்டம்

பழநி : அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொடர்பான கண்டனத்தை அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் எழுப்பியதால் ஏற்பட்ட விவாதத்தை தொடர்ந்து பழநி நகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது.பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்), நகர் நல அலுவலர் மனோஜ் குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்

சாகுல் ஹமீது (தி.மு.க.,) :கூட்டத்திற்கு கமிஷனர் உட்பட அதிகாரிகள் யாரும் வருவதில்லை. வீட்டு வரி ,தண்ணீர் வரியில் வேறுபாடு உள்ளது. இதனை யாரிடம் கேட்பது.தலைவர்:அதிகாரிகள் யாரும் தற்போது இல்லை. அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் .இந்திரா (தி.மு.க.,):சுகாதாரம் மோசமாக உள்ளது. கிழக்கு ரதவீதி சேதமடைந்துள்ளது.தலைவர்:விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.பத்மினி முருகானந்தம் (காங்.,):தைப்பூசம் நிதியாக கோயில் நிர்வாகம் எவ்வளவு வழங்கி உள்ளது.நகர் நல அலுவலர்:2023 ல் ரூ. 1.99 கோடி வழங்கியது. 2024 ஆம் ஆண்டுக்கு இன்னும் வழங்கவில்லை.பத்மினி முருகானந்தம் (காங்.,):காந்தி மார்க்கெட் எப்போது திறக்கப்படும்.தலைவர்:விரைவில் திறக்கப்படும். பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையிட்டால் பல பணிகளில் இடையூறு ஏற்படுகிறது.காளீஸ்வரி (தி.மு.க.,):நாய் தொல்லை அதிகமாக உள்ளது. குளத்துரோடு, பஸ் ஸ்டாண்ட் துர்நாற்றம் வீசும் பகுதியாக உள்ளது. காந்தி ரோடு மார்க்கெட் சாக்கடைதுார்வாரிய பிறகு சரி செய்யப்படாமல் உள்ளது.தலைவர்:நாய் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். குளத்து ரோடு பஸ் ஸ்டாண்ட் துர்நாற்றம் சரி செய்யப்படும். காந்தி ரோடு மார்க்கெட் சாக்கடையை வணிகர்களே சரி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.சுரேஷ் (தி.மு.க.,):சண்முக நதி சுகாதாரத் கேடுடன் உள்ளது. திருவள்ளுவர் சாலைய ஆக்கிரமிப்பு கட்டடம் குறித்து நீதிமன்றத்திற்கு எவ்வளவு அளவு காட்டப்பட்டுள்ளது. வணிகவரி, சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா.தலைவர்:இதுவரை அந்த கட்டடத்திற்கு வரி விதிக்க வில்லை.முருகேசன் (வி.சி.க.,): சமுதாய கூடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.தலைவர்:நடவடிக்கை எடுக்கப்படும்.ஜன்னத்துல் பீர் தெளஸ் (அ.தி.மு.க.,):அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்திலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.அப்போது தி.மு.க., கம்யூ.,கவுன்சிலர்கள், அண்ணா பல்கலை பிரச்னை இங்கு பேசக்கூடாது. அப்படி பேசினால் பொள்ளாச்சி விவகாரத்தையும் பேச வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தலைவர்:ஜன்னத்துல் பிரதோஷ், கவுன்சிலர்கள் அமர வேண்டும்.தொடர்ந்து ஜன்னத்துல் பிர்தோஸ் பேசிய நிலையில்தலைவர்:ஜன்னத்துல் பிரதோஸ் வெளியேறவும்.அ.தி.மு.க., கவுன்சிலரே வெளியேறாமல் பேசிகொண்டிருந்தார்.இதனால் வாக்குவாதம் முற்றியது.தலைவர்:நகராட்சி கூட்டம் இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது. அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன் பின் தேசிய கீதம் இசைக்க, அ.தி.மு.க., கவுன்சிலர் ஜன்னத்துல் பிரதோஷ் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை