உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிவன்கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு

சிவன்கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு

திண்டுக்கல்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிேஷக சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் அலங்கரிக்க வழிபாடு நடந்தது. அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கூட்டுறவு நகர் செல்வவிநாயகர் கோயிலில் காசி விஸ்வநாதர், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் கைலாசநாதர், முள்ளிப்பாடி திருகாமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அனைத்து கோயில்களிலும் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து, அன்னாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. இதன்பின் சுவாமியின் திருமேனியை அலங்கரித்த அன்னம் கலைக்கப்பட்டு மீண்டும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ