தரமற்ற இனிப்புகளா... புகார் எண் அறிவிப்பு
திண்டுக்கல்: மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி அறிக்கை: தீபாவளி முன்னிட்டு பேக்கரி, ஓட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் உணவு பண்டங்கள் தயாரிக்க வேண்டும். அனுமதி அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்க கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுபடியும் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சீட்டில் தயாரிப்பாளரின் முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு,பேக்கிங் தேதி, காலாவதி காலம். சைவ, அசைவ குறியிடு குறிப்பிட வேண்டும். பண்டிகை காலத்தில் பலகாரங்கள் தயாரிப்பாளர் http://foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322ல் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.