உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரியன்குளக்கரையில் புதிய வாய்க்கால் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஏற்பாடு

கரியன்குளக்கரையில் புதிய வாய்க்கால் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஏற்பாடு

சின்னாளபட்டி : சின்னாளபட்டி கரியன்குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வடிகால் அமைக்கும் ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளது.சின்னாளபட்டி அம்பாத்துறை ரோட்டில் 12 ஏக்கரில் உள்ள கரியன்குளத்தில் சில ஆண்டுகளாக கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க வடிகால் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் பெரியசாமி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை கண்மாயின் வடக்கு கரையோரம் புதிதாக சிமென்ட் வாய்க்கால் அமைத்து, கருமாரியம்மன் கோயில் அருகே உள்ள பெரிய வடிகாலில் இணைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன. இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆத்தூர் ஒன்றிய பொறியாளர் ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !