மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் சாதனை
26-Oct-2024
வேடசந்தூர்: திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. கே.ராமநாதபுரம் பள்ளி சார்பில் 42 மாணவர்கள் பங்கேற்றனர். பிளஸ் 2 மாணவி பிரபா 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும்,8ம் வகுப்பு மாணவி வெண்ணிலா உயரம் தாண்டுதலிலும்,பிரவீன் 9ம் வகுப்பு குண்டு எறிதலிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றனர். மாணவிகளுக்கான 14 வயதுக்கு உட்பட்டோர் தொடர் ஓட்டத்தில் கவிதா, மோனிஷா, பூவிதா அபிநயா ஆகியோர் வெற்றி பெற்றனர். நீளம் தாண்டுதலில் சர்மிளா 3ம் இடம், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவானந்தம் 3ம் இடம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவிதா 2ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த், உதவி தலைமை ஆசிரியர் வீரமணி, ஆசிரியை முத்துமீனா, உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்யஜோதி ஆகியோர் பாராட்டினர்.
26-Oct-2024