உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வடமதுரை ரோட்டில் பழைய சாந்தி தியேட்டர் காம்ப்ளக்சில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம்., மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.அதிகாலை, 4:10 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நேரத்தில், வங்கி தலைமை அலுவலகத்திற்கு மெசேஜ் சென்றது. அதே நேரத்தில் அலாரம் ஒலித்ததால், கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ