உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்

பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்

கோபால்பட்டி: வேம்பார்பட்டி ஐயப்பன் கோயிலில் வேம்பார்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக 200க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து 48 நாள் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து வாரம் தோறும் சனிக்கிழமை கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், பஜனை, அன்னதானம் நடந்தது. நேற்று மண்டல பூஜை அன்னதானவிழா நடந்தது.வேம்பார்பட்டி ஐயப்பன் கோயிலில் கூடிய பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு பின் ஊர்வலமாக சென்று கிராம கோயில்களில் சுவாமிகளை வழிபட்டனர். பின் மத நல்லிணக்கத்துடன் வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்றனர். பள்ளிவாசலில் அசரத் பாத்தியா ஓதி துவா செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, அன்னதானம் நடந்தது. நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன் பங்கேற்றனர். மாலையில் ஐயப்பன் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை