உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வீச தடை

வனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வீச தடை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை பகுதியில் வனத்துறை , தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சாலை ஓரங்கள் ,வனப்பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், மது பாட்டில்களை சேகரித்து அப்புறப்படுத்தினர். இப்பணிகளை துவக்கி வைத்த உதவி வன பாதுகாவலர் வேல்மணிநிர்மலா கூறியதாவது: வனப்பகுதிகள் ,ரோட்டோரங்களில் மது அருந்தினாலும், பிளாஸ்டிக் பொருட்களை வீசி சென்றாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வனச்சரகர் ராஜா, கிருபா உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சிவக்குமார், கிருபா பவுண்டேஷன் டைரக்டர் சுஜாதா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ