உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராம்சன்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

ராம்சன்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

நத்தம் : நத்தம்- மெய்யம்பட்டியில் உள்ள ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ராம சதாசிவம்- பழனியம்மாள் நினைவாக மாவட்ட கூடைப்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல் ஜி.டி.என்., காலேஜ் அணி முதல் பரிசு, யங்ஸ்டார்ஸ் அணி 2-வது பரிசு பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா ராம்சன்ஸ் பள்ளி தாளாளர் ராமசாமி தலைமையில் நடந்தது. கைப்பந்து சங்க தலைவர் துரை, தடகள சங்க தலைவர் சிவக்குமார், கூடைப்பந்து சங்க தலைவர் செண்பகமூர்த்தி, செயலாளர் ஞானவேல், பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு, கோப்பை, கேடயங்கள் வழங்கப்பட்டது. மூத்த கூடைப்பந்து பயிற்சியாளர் முத்துராஜா,இந்திய ராணுவ முன்னாள் கூடைப்பந்து பயிற்சியாளர்கள் பிரேம்குமார், சரத்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை