பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்
பழநி: பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் வாகனங்கள் 2024 மார்ச் 8 முதல் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கிரிவீதி வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் ,சுற்றுலா பஸ்ஸ்டாண்டுக்கு மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க கோயில் நிர்வாகம் இலவசமாக 11 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய ஒரு பேட்டரி மினி பஸ் , 23 பேர் அமரக்கூடிய 13 பேட்டரி பஸ் என 32 மின் வாகனங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் சென்னை ஜி.ஆர்.டி. தங்க மாளிகை மகாலட்சுமி டிரஸ்ட் சார்பில் 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது. இதை சேர்ந்து தற்போது 33 மின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.