பி.எட்., எம்.எட்., கல்வி ஆண்டு தொடக்க விழா
திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி கே.நஞ்சப்பக் கவுண்டர் கல்வியியல் கல்லுாரியில் பி.எம்., எம்.எட்., 2024- 25 கல்வி ஆண்டின் தொடக்கவிழா நடந்தது. கல்லுாரி கலையரங்கத்தில் நடந்த இதற்கு கல்லுாரி முதல்வர் கோபால் வரவேற்றார். தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ராஜசேகரன் ,டி.என்.எஸ்.சி.இ. எம்.ஏ., பொதுச் செயலாளர், நடராஜன் மதுரை காமராஜர் பல்கலை கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனர் அண்ணாதுரை பேசினர். துணை பேராசிரியை செல்வமாலினி நன்றி கூறினார். துணை பேராசிரியை அமிர்தம் விழாவை ஒருங்கிணைத்தார்.