| ADDED : பிப் 10, 2024 05:38 AM
ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் புலியூர்நத்தம் ஊராட்சி, பெரியகுளிபட்டியில் கிராமம் தோறும் செல்வோம் இயக்கம் ,லோக்சபா தேர்தல் பணி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ருத்திரமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர், கிழக்கு ஒன்றிய தேர்தல் பணி பார்வையாளர் நாட்டுத்துரை பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், ஊரக உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் குமரேசன், ஒன்றிய துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், சின்னான், ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, கணேசமூர்த்தி இளைஞர் அணி ஒன்றிய தலைவர் பிரபு பங்கேற்றனர். குளிப்பட்டி கிளைத்தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.