உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 3 மாதமாகியும் நடக்காத மாநகராட்சி கூட்டம் விதியை மீறுவதாக பா.ஜ., விமர்சனம்

3 மாதமாகியும் நடக்காத மாநகராட்சி கூட்டம் விதியை மீறுவதாக பா.ஜ., விமர்சனம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் நடத்தி 3 மாதங்கள் நெருங்கி வரும் நிலையில் விதியை மீறுவதாக பா.ஜ., விமர்சித்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மாதந்தோறும் நடப்பது வழக்கம். ஏற்கனவே 40 அல்லது 50 நாட்கள் இடைவெளியில் தான் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டம் நடந்தால்தான் கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளின் குறைகளை சுட்டிக்காட்டிட முடியும். இந்நிலையில் டிசம்பர் 17ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடந்தது. அதன்பின் தற்போது 3 மாதங்கள் ஆகிவிட்ட போதும் தற்போது வரை கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கூட்டம் தொடர்பாக கமிஷனருக்கு கடிதம் அனுப்பியும் விதியை மீறி கூட்டம் நடத்தப்படாமல் உள்ளதாக பா.ஜ., கவுன்சிலரும் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவருமான தனபாலன் கூறினார். அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் 3 மாதங்களாக நடைபெறவில்லை. மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் இதற்கு முன்பு நடந்த கூட்டம் 2 மாத இடைவெளிக்கு பின்னரே நடத்தப்பட்டது. இந்த முறை 3 மாதங்களை நெருங்கும் நிலையில் இதுவரை கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 3 மாதங்கள் கூட்டம் நடத்தப்படவில்லையெனில் மன்றத்தை கலைக்க மாநகராட்சி கமிஷனர் கலெக்டரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி