உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏர்கன் குண்டு பாய்ந்து சிறுவன் காயம்

ஏர்கன் குண்டு பாய்ந்து சிறுவன் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் ஏர்கன்னை வைத்து விளையாடும் போது தவறுலதாக இயக்கப்பட்டு குண்டு பாய்ந்ததில் சிறுவன் காயமடைந்தார்.நத்தம் பெரியமலையூரைச் சேர்ந்த சிறுவன் ரகுபதி 17. இவர் சிறுமலை தென்மலையில் டோமினிக் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் ரகுபதி தோட்டத்தில் வேலை செய்தபோது அப்பகுதி சிறுவன் ஒருவருடன் விளையாடினார். அப்போது இருவரும் தோட்டத்திலிருந்த ஏர்கன்னை எடுத்து விளையாடினர். எதிர்பாராத விதமாக ஏர்கன்னிலிருந்து குண்டு ரகுபதி வயிற்றில் பாய்ந்தது. காயமடைந்த ரகுபதி திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை