உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்

வடிகாலில் மண்டியுள்ள புதர்கள் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் நீர் வடிகால் பகுதியில் செடிகள் வளர்த்து புதர் மண்டியுள்ளது. மழை காலங்களில் நீர் செல்ல முடியாமல் தேங்கி குளம்போல் ரோட்டில் செல்கிறது கால்வாயில் அடைத்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும்.--செந்தில்குமார், திண்டுக்கல்.சேதமடைந்த கழிவுநீர் மூடி : ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் கழிவுநீர் மூடி சேதம் அடைந்துள்ளது. இதனால் ரோடுகளில் சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை பெய்தால் சொல்லவே வேண்டாம். இதனை சீரமைக்க வேண்டும். --இளவரசன், ஒட்டன்சத்திரம்.வீணாகும் குடிநீர் : பழநி நகர் போலீஸ் ஸ்டேஷனில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. நாள்தோறும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடிநீரின்றி மக்கள் பாதிக்கின்றனர். குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முகமது ஜின்னா, மானுார்.தெருவோரங்களில் குப்பை : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான் நகர் ஐஸ்வர்யாநகர் நகர் பகுதிகளில் தெருவோரங்களில் குப்பை குவிந்துள்ளது. வீடுகளில் குப்பை வாங்கவும் யாரும் வருவதில்லை. நடவடிக்கை வேண்டும்.-உசேன், திண்டுக்கல்.ரோட்டில் ஓடும் கழிவு நீர் : வடமதுரை- ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நெடுஞ்சாலை துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - ---கணேசன், வடமதுரை.போக்குவரத்துக்கு சிரமம் : புதுச்சத்திரம் முதல் பொம்மநல்லுார் ரோடு பணி நடைபெற்று வருகிறது. இருபுறமும் குழிதோண்டி மண்ணை இப்படி கொட்டி குவித்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. ரோடு பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.காத்திருக்கு ஆபத்து : நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியிலிருந்து குருவித்துரை செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.சி.அய்யர்பாண்டி, அணைப்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை