பஸ் போக்குவரத்து மாற்றம் கலந்தாய்வு
வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் ரூ.ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பில் கட்டடபணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வேடசந்தூர் கரூர் ரோட்டில் தனியார் தியேட்டர் அருகே செயல் பட்டுவருகிறது. பஸ்கள் பல நகர் பகுதிக்குள் வருவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவமனை செல்வோர் பாதிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காலை 8:30 மணி முதல் காலை 9:30 மணி, மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வடமதுரை ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பஸ்கள் சென்று திரும்புவது என முடிவு செய்யப்பட்டது.மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகா ஆனந்த், பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின், தி.மு.க., பேரூர் செயலாளர் கார்த்திகேயன்,இளைஞரணி ரவிசங்கர், வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், செயலாளர் ராஜா பங்கேற்றனர்.