பஸ் கண்ணாடி உடைப்பு
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையிலிருந்து மணப்பாறை ரோட்டில் கரூர் மாவட்டம் இடையபட்டி சென்ற பஸ்ஸில் கரூர் சீதப்பட்டி ரத்தினம் 46, டிரைவராகவும், கரூர் ஓமாந்தூர் சஞ்சீவி 55, நடத்துனராகவும் இருந்தனர். குஜிலியம்பாறை பண்ணைக்காரன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டபோது பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது.பஸ் ஸ்டாப்பில் இறங்கியவர்கள் கண்ணாடியை உடைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பஸ் டிரைவர் பஸ்சை குஜிலியம்பாறை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார். போலீசாரோ மீண்டும் அனுப்பி வைத்தனர். டெப்போவில் தகவல் கூற போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தும்படி கூற மீண்டும் குஜிலியம்பாறை ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.