உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கைவினை கலைஞர்களுக்கு அழைப்பு

கைவினை கலைஞர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல்: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி,தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், அழகுக்கலை, துணி நெய்தல்பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை பின்னுதல் உட்பட 25 வகையான கைவினைத் தொழில்களுக்கு www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அல்லது 0451-2 904 215, 89255 33943 ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை