உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மறுகட்டுமானத்திற்கு அழைப்பு

மறுகட்டுமானத்திற்கு அழைப்பு

திண்டுக்கல் : ஊராட்சிகளில் இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் உள்பட பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டப்பட்டது. தற்போது சிதலமடைந்த ஓடுகள், சாய்தள கான்கீரிட் கூரை வீடுகளை முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தில் சீரமைத்து கொள்ளலாம். தேர்வாகும் பயனாளிகள் 210 சதுரஅடிக்கு உட்பட்ட அளவில் தங்கள் வீடுகளை மறுகட்டமைப்பு செய்து கொள்ளஅவர்களின் வங்கிக் கணக்கிற்கு தமிழக அரசால் ரூ. 2.40 லட்சம் வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரடியாக , வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் தபால் மூலமாக ஏப். 24 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ