உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டெலிவரி ஊழியர்களுக்கு அழைப்பு

டெலிவரி ஊழியர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல : திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் அறிக்கை : மாவட்டத்தில் சொமொட்டோ, ஸ்விக்கி, ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத உணவு பொருட்களை விநியோகம் வேலை செய்யும் இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.ஆதார் கார்டு, வயது ஆவணம், குடும்ப அட்டை, வங்கி கணக்கு விவரம், நியமனதாரார் ஆவணம் ஆகியவற்றுடன் www.tnuwwb.tn.gov.inல் தமிழக உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் கிக் தொழிலாளர்கள் என தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்தும் பதிவு செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி