கஞ்சா, குட்கா பறிமுதல்
திண்டுக்கல்: புருலியா திருநெல்வேலி ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி எஸ்.எஸ்.ஐ.,மணிகண்டன் தலைமையில் போலீஸ் சோதனை நடத்தினர். ரயிலின் கடைசி பொதுப்பெட்டியில் சீட்டுக்கு அடியில் பேக்கில் 4 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிலும், குட்காவை உணவுபாதுகாப்பு துறை அலுவலரிடமும் ஒப்படைத்தனர்.