உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கேரம் போட்டி; திண்டுக்கல், வத்தலகுண்டு பள்ளி சாம்பியன்

 கேரம் போட்டி; திண்டுக்கல், வத்தலகுண்டு பள்ளி சாம்பியன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட கேரம் போட்டிகளில் திண்டுக்கல் புனித மரியன்னை, வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துடன் சுழற்கோப்பைகளை வென்றனர். திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி , பிரவீன் செல்வகுமார் நினைவு கேரம் அகாடமி இணைந்து நடத்திய 7-ம் ஆண்டு சந்தியாகு சிறுமணி அம்மாள் நினைவு சுழற் கோப்பைகளுக்கான மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள்.திண்டுக்கல் புனித ஜான் பால் அகாடமியில் நவ.29,30ல் நடைபெற்றது. 30க்கு மேற்பட்ட பள்ளிகளி லிருந்து 200க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழா மாவட்ட கேரம் சங்க துணைத்தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜெயா ஆரோக்கிய செல்வன் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட கேரம் சங்க செயலாளர் கார்த்திகேயன், புனித ஜான்பால் அகாடமி முதல்வர் ஸ்டாலின் கென்னடி, பிரவீன் செல்வகுமார் நினைவு கேரம் அகாடமி தலைவர் திலிப் மேண்டிஸ், நிறுவனர் ஜேம்ஸ் தோமினா, செயலாளர் ஜெஸ்பர் செல்வகுமார், பொருளாளர் ஜோ மேத்யூ, இணைச்செயலாளர் சூரிய பிரகாஷ் பரிசு வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் சுழற் கோப்பையை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி , மாணவியர்களுக்கான சாம்பியன்ஷிப் கழற் கோப்பையை வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றன. பிரவின் செல்வக்குமார் நினைவு ஆண்கள் ஒற்றையர் சுழற் கோப்பையை பெலிக்ஸ் வென்றார். 12 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் சாத் கேகேஏஜி பள்ளி மாணவர்,இரட்டையர் பிரிவில் மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலன் - சர்வேஷ், 14 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மித்ரன், இரட்டையர் பிரியில் கவியரசு - மித்ரன், 18 வயது ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சுகுமார், இரட்டையர் பிரிவில் முகமது இர்பான் - முகமது ஆரிஷ் பெற்றனர்.12 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் எஸ்.எம்.பி.எம்., மாணவி ஷ்ரவந்தி, இரட்டையர் பிரிவில் வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி நித்ரா ஸ்ரீ- யஸ்வந்திகா ,14 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருணாம்பாள், இரட்டையர் பிரிவில் அருணாம்பாள் - யுவஸ்ரீ, 18 வயது மாணவியர் ஒற்றைப் பிரிவில் வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி லாவண்யா, இரட்டையர் பிரிவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிரவீனா - கீர்த்தி பெற்றனர்.போட்டி நடுவராக லெஸ்லி சாலமோனும், உதவி தலைமை நடுவராக தங்க பாண்டியும் இருந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வகுமார் நிர்வாகிகள், ஜான்பால் அகாடமி, பிரவீன் செல்வகுமார் நினைவு கேரம் அகாடமி நிர்வாகிகளுடன் இணைந்து செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை