உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாறை கற்களை உடைத்தவர்கள் மீது வழக்கு

பாறை கற்களை உடைத்தவர்கள் மீது வழக்கு

குஜிலியம்பாறை, : தனியார் பட்டா நிலத்தில் உள்ள பாறையில் அனுமதி இன்றி கற்களை உடைத்து எடுத்ததாக நில உரிமையாளர் , டிரைவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திண்டுக்கல் புவியியல் சுரங்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் பாளையம் பகுதியில் கனிம வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது பாளையம் காளியப்பன் இடத்தில் உள்ள பாறையில் அனுமதியின்றி கற்கள் உடைக்கப்படுவதை கண்டனர். அப்போது 6 அடி நீளம் கொண்ட 21 கற்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். வாகனத்துடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் குஜிலியம்பாறை போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி நில உரிமையாளர் கே.ஆர்.காளியப்பன் , வாகன ஓட்டுநர் தங்கராஜ் மீது எஸ்.ஐ., கலையரசன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை