உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடகனாற்றில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுக்கு வாய்ப்பு

குடகனாற்றில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுக்கு வாய்ப்பு

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேருராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் சாக்கடை சரியான திட்டமிடல் இல்லாததால் இதன் கழிவு நீர் குடகனாற்றில் கலக்கும்படியாக அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய பாசனத்திற்கான பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், உலகம் முழுவதிலும் இருந்து வருகை தந்து அகரம் முத்தாலம்மனை வணங்கி புனித நீராடும் பக்தர்களுக்கு நோய்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சாக்கடை கழிவுநீரை திசை திருப்பி குடகனாற்றின் புனிததன்மை காக்க பேரூராட்சி நிற்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ