மேலும் செய்திகள்
மாவட்ட கால்பந்து போட்டி: அக்சயா அகாடமி முதலிடம்
28-Oct-2024
திண்டுக்கல்: மாநில அளவிலான சதுரங்க போட்டி திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் லக்சர் வேர்ல்டு பள்ளி, ஆனந்த் செஸ் அகாடமி இணைந்து திண்டுக்கல் லக்சர் வேர்ல்டு பள்ளியில் நடத்தியது . பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280 மாணவர்கள் பங்கேற்றனர். 8 வயது பிரிவில் திருச்சியை சேர்ந்த சிவின், 11 வயது பிரிவில் விருதுநகரை சேர்ந்த அக்சய விக்னேஷ், 15வயது பிரிவில் மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்து மிதிவண்டிகள் பரிசாக பெற்றனர். 150 மாணவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. லக்சர் வேர்ல்டு பள்ளி தாளாளர் சுவாமிநாதன் பரிசு பொருட்களை ரூ.30,000 மதிப்பில் வழங்கினார். ஆனந்த் செஸ் அகாடமி சார்பாக ரூ.70,000 வழங்கினர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.சிறப்பு விருந்தினர்களாக காஜாமைதீன், ரமேஷ்பட்டேல், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் புருசோத்தமன், செயலாளர் சந்திரசேகரன், ஆனந்த் செஸ் அகாடமி செயலாளர் ரமேஷ்குமார், மதன் முனியப்பன் பதக்கம், சான்றிதழ் பரிசுகளை வழங்கினர்.
28-Oct-2024