மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
13-May-2025
நத்தம்: நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அரசு கலை , அறிவியல் கல்லுாரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றினார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது: பொதுமக்கள், மாணவர்கள் நீண்ட நாள் கோரிக்கையான அரசு அறிவியல் கல்லுாரியை முதலவர் தொடங்கி வைத்துள்ளார். இக்கல்லுாரியில் 5 பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நத்தம் கே.எஸ்.எஸ், முகமது யூசூப் நினைவாக நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்காந்தர் பாட்ஷா குடும்பத்தினர் 5 ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்கி உள்ளனர் என்றார்.கலெக்டர் சரவணன், சச்சிதானந்தம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட தி.மு.க., பொருளாளர் க.விஜயன், துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ரத்தினக்குமார், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், மண்டல கல்லுாரிகளின் இணை இயக்குநர் குணசேகரன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாராமன், தாசில்தார் ஆறுமுகம், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் கலந்து கொண்டனர்.
13-May-2025