உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு ஆயுள்

சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு ஆயுள்

திண்டுக்கல்: சத்திரபட்டி அருகே ஆலம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன் 28. 2024ல் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். வடமதுரை மகளிர் போலீஸ் முருகேசனை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். முருகேசனுக்கு ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியதாரா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை