கடன் கொடுத்தவர்கள் திட்டியதால் தற்கொலை தாயின் காலை பிடித்து கெஞ்சிய குழந்தைகள்
வத்தலக்குண்டு: கடன் கொடுத்தவர்கள் திட்டியதால் தாய் தற்கொலை செய்த நிலையில் அவரது குழந்தைகள் காலை பிடித்து கெஞ்சியும் தனது முடிவில் தளராமல் பரிதாபமாக இறந்தார் .காந்திநகரை சேர்ந்தவர் பிரசித்சந்திரன். ஓட்டலில் சமையல் வேலை செய்கிறார். இவரது மனைவி அஜித்ரா 27. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.பிரசித் சந்திரன் குஜிலியம்பாறைக்கு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் அஜித்ரா , குழந்தைகள் இருந்தனர். நேற்று காலை இவரது வீட்டிற்கு வந்த இருவர் கடனை கேட்டு தகாத வார்த்தையால் திட்டினர்.மனமுடைந்த அஜித்ரா மின்விசிறியில் துாக்கிட முயன்றபோது பிள்ளைகள் இருவரும் தாயின் காலினை பிடித்து கதறிய நிலையில் பிள்ளைகளை உதறிவிட்டு துாக்கில் தொங்கினார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அஜித்ரா இறந்து விட்டார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.