குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு வார விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.தேசிய, சர்வதேச குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் முன்னிட்டு பொதுமக்கள் , சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நவ. 20 வரை நடக்கிறது. கலெக்டர் தொடங்கி வைத்தார்.இதை தொடர்ந்து குழந்தைகளுக்கான நடை என்ற தலைப்பில் ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவகத்தில் தொடங்கி அஞ்சலி ரவுண்டனா சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தது. ஏ.டி.எஸ்.பி., தெய்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், சமூக நல அலுவலர் புஷ்பகலா, கலெக்டரின் தனி எழுத்தர் சரவணக்குமார், நன்னடத்தை அலுவலர் ஜோதிமணி பலர் கலந்து கொண்டனர்.