உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிறிஸ்துவ பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கிறிஸ்துவ பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி தலைவர் டாக்டர் டாம்செரியன் தலைமை வகித்தார். கல்லுாரியில் பல்வேறு துறைகளில் பயின்று 2022--23 ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற 263 மாணவர்களுக்கு ஆந்திரா மாநிலம் டாக்டர் ஒய்.எஸ்.ஆர். பல்கலை துணைவேந்தர் டாக்டர் கொருகொண்டாபாப்ஜி பட்டங்களை வழங்கினார். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், துறைவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி துணைத் தலைவர் டாக்டர் டி.மைக்கேல் குமார், கல்லுாரி முதல்வர் கே.பரிமளகீதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ