உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளிகளில் கலாசார சீரழிவு மற்றும ஒழுங்கீன செயல்கள் தொடர்கிறது

பள்ளிகளில் கலாசார சீரழிவு மற்றும ஒழுங்கீன செயல்கள் தொடர்கிறது

கொடைக்கானல்: பள்ளிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவு மற்றும் ஒழுங்கின செயல்களை கல்வித்துறை கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு செயல்படுவதால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் செயல்படும் நிலையில் சமீபகாலமாக ஆசிரியர் மாணவர்களிடையே இணக்கம் இல்லாத இடைவெளி நீடித்து வருகிறது. கற்பிக்கும் ஆசிரியர்கள் குருவாக கருதப்படும் நிலையில் சில ஆசிரியர்களின் தவறான போக்கால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் அவப்பெயர்கள் ஏற்படுகின்றன. இதனால் நன்மதிப்போடு செயல்படக்கூடிய ஆசிரியர்கள் நொந்து கொள்கின்றனர். ஒழுக்க சீர்கேடாக நடக்கும் ஆசிரியர்கள் மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது நேர்மையாக பணிபுரியும் ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது. சமீபகாலமாக பள்ளி வளாக பகுதிகளிலே போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களின் போக்கு, ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்வது, அலைபேசி பயன்பாடு, பள்ளிக்கு முறையாக செல்லாத ஆசிரியர்கள், பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க தவறும் அதிகாரிகளால் பள்ளி செயல்பாடு பாதித்துள்ளது. மாணவர்களின் நடவடிக்கையை கண்டிக்கும் ஆசிரியர்களின் போக்கிற்கு கடிவாளம் இட்ட விதிகளால், ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள கடமையை மட்டும் செய்து, மாணவர்கள் பிரச்னைகளை தவிர்க்கும் போக்கு நீடிக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கை மீது கண்டிப்பு காட்டாத சூழலால் மாணவர்கள் கட்டுபாடின்றி சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். கல்வி,ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இணக்கம் இல்லாத இச்சூழலால் எதிர்கால தலைமுறை மாணவர்கள் சமுதாய சீர்கேட்டுகளுடன் தங்களது வாழ்வை இழக்க காரணமாக உள்ளது. * இணக்கம் இல்லாத சூழல் தற்போது மாணவர்கள், ஆசிரியர்களிடையே இணக்கம் இல்லாத சூழல் நிலவுகிறது. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்காது அவர்கள் மீது கரிசன காட்டும் கல்வித்துறை அதிகாரிகளால் தவறுகள் அதிகரித்து வருகின்றது. பள்ளிகள் சார்ந்த சமீபத்ய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது.இதற்கு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கள ஆய்வு செய்ய அதிகாரிகள் துரிதம் காட்ட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்து பள்ளி வளாகத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை வாரந்தோறும் ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும். கல்வித் துறையும், அரசும் தவறும் செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்கால மாணவர்களின் வாழ்வு பிரகாசம் அடையும். ஜெயபிரகாஷ், சமூக ஆர்வலர், பண்ணைக்காடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

m.arunachalam
ஆக 04, 2025 23:41

மிக மிக முக்கியமான ஒரு விஷயம் இது. ஒவ்வொரு கிராமத்திலும் ஆசிரியர் நடத்தை குறித்த தகவல்களை அறிந்து வேண்டிய முறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒரு முக்கியமான விஷயம், அனைத்து ஜாதியினரும் தங்களின் ஜாதியில் யாதொரு புதிய நபரும் குடிப்பழக்கம் அல்லது வேறு ஏதேனும் போதை பொருட்கள் உபயோகிக்கும் நபராக மாறாமல் கண்காணித்து கட்டுப்படுத்தினால் சில வருடங்களில் நாம் அனைவரும் நல்ல சமுதாயமாக வாழலாம் .


vbs manian
ஆக 04, 2025 18:36

கல்வி அமைச்சர் மௌன சாமி ஆகிவிட்டார்.


raja
ஆக 04, 2025 06:26

இப்படி இருப்பது தான் திராவிட மாடல் என்று இந்தியாவிலையே ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் கோடி தமிழனின் தலையில் கடனை வாங்கி வைத்து நம்பர் ஒன்னு முதல்வர் என்று தனக்கு தானே பெருமை பேசி புளங்காகிதம் அடையும் முதல்வரும் அந்த மங்குனி அமைச்சர் பொய்மொழியும் இதனை கவனிக்க நேரம் இல்லாமல் தமிழனுக்காக ஓங்கோல் கோவால் புர திராவிடர்கள் உழைத்து கொண்டு இருக்கிறார்கள்....தமிழன் மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்று பெருமிதம் வேறு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை