மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்; கைது
12-Nov-2024
பழநி,:திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப். ரோட்டில் உள்ள பேக்கரியில் பழநியை சேர்ந்த ஒருவர் 3 காளான் பப்ஸ் வாங்கினார். வீட்டில் சென்று சாப்பிடும் போது ஒரு பப்சில் பாத்திரம் துலக்கும் சுருள் கம்பி இருந்தது. உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்லதுரை தலைமையில் அலுவலர்கள் பேக்கரியை ஆய்வு செய்தனர். பேக்கரிக்கு அபராதம் விதித்தனர். சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
12-Nov-2024