மேலும் செய்திகள்
கொடைக்கானலில் உறை பனி வெட வெடக்கிறது குளிர்
03-Jan-2025
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறை பனி நீடித்து வரும் நிலையில் தென் மாவட்ட சமவெளிப்பகுதிகளை பனியின் தாக்கம் போர்வை போல் மூடிய ரம்மியமான சூழலை காலை நேரத்தில் கோக்கர்ஸ்வாக்கில் நின்றபடி பயணிகள் ரசித்தனர்.கோக்கர்ஸ்வாக்கிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளை காண முடியும். பசுமை நிறைந்த பள்ளத்தாக்கில் உயரப்பகுதியில் அமைந்துள்ள கோக்கர்ஸ்வாக்கில் நின்றப்படி இயற்கையின் அரவணைப்பின் அரிய காட்சிகளை காணலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வருவது வழக்கம்.தற்போது கொடைக்கானல் மலைப்பகுதி முழுதும் உறைபனியின் தாக்கம் நிலவும் நிலையில் சமவெளிப்பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. இங்கிருந்து பார்க்கும் போது தென் மாவட்ட பகுதிகளை பனிப்போர்வை மூடியப்படி கடல் போல் காட்சியளித்தது. இதற்கிடையே சூரியன் உதித்து அழகுற காட்சியளித்ததையும் கோக்கஸ்வாக்கிலிருந்து சுற்றுலா பயணிகள் உள்ளூர்வாசிகள் ரசித்தனர். பனிகாலம் நிறைவடையும் வரை இக்காட்சி சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும்.
03-Jan-2025