மேலும் செய்திகள்
இன்ஜினியர்ஸ் தினம் கொண்டாட்டம்
03-Oct-2024
திண்டுக்கல்: அகில இந்திய கட்டுநர் சங்கம் கண்காட்சி குழு தலைவர் தனகர் கூறியதாவது:அகில இந்திய கட்டுநர் சங்கம் திண்டுக்கல் மையம் சார்பாக கட்டுமான பொருட்கள் கண்காட்சி-2024திண்டுக்கல் டட்லி மேல்நிலை பள்ளி மைதானத்தில் இன்று துவங்கி அக். 27 வரை மூன்று நாட்கள் நடக்கிறது . இதை இன்று காலை 11:00 மணிக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி, பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார் துவக்கி வைக்கின்றனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான அரங்குகள் பொதுமக்களுக்கு பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து கட்டுமான பொருட்கள், வங்கி கடன் வசதிகள் என வீடு கட்டும் பயனாளிகளுக்கு உதவும் கண்காட்சியாக இருக்கும். தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுள்ளார்.
03-Oct-2024