உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி வெற்றி

கிரிக்கெட் லீக்: பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி வெற்றி

திண்டுக்கல : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரி சார்பில்பி.எஸ்.என்.ஏ. கோப்பையின் ஆர்.வி.எஸ்.கல்லுாரியில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி வெற்றி பெற்றது.ஆர்.வி.எஸ்.கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளி அணி 25 ஓவரில் 2விக்கெட் இழந்து 321ரன்கள் எடுத்தது. தீபன் 121, கிரிஷ்ராகுல் 117, ஷர்வின் 39ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் பார்வதிஸ் அனுகிரஹா சர்வதேச பள்ளி 18 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஷர்வின் 4 விக்கெட் எடுத்தார். ஆர்.வி.எஸ்.கல்லுாரியில் நடந்த போட்டியில் வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி 25 ஓவரில் 8 விக்கெட் இழந்து 166ரன்கள் எடுத்தது. அபினவ், பிரசன்னகுமார் தலா 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த வேடசந்துார் பெட்போர்ட் அகாடமி எம்.ஹெச்.எஸ்.எஸ். அணி 23.3 ஓவரில் 87 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கோபிநாதன் 28ரன்கள், விஜய்குமார் 20ரன்கள் மட்டுமே கொடுத்து 4விக்கெட் எடுத்தார். ஸ்ரீ வீ கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் சவுந்தரராஜா வித்யாலயா பள்ளி அணி 10 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஷர்வின், அபிலாஷ் தலா 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளி அணி 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 38ரன்கள் எடுத்து வென்றது. ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில்திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 30 ஓவரில் 8 விக்கெட் இழந்து 244ரன்கள் எடுத்தது. கிரிதரகுகா 41, முகமது பஹீம் 97, ஓஷோ 56, .பிரிதித் 38ரன்கள், பார்த்திபன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி அணி 30 ஓவரில் 8 விக்கெட் இழந்து 117ரன்கள் மட்டுமே எடுத்தது. மனோபிரசாத் 30ரன்கள், ரிஷ்யந்த் 4 விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த ஒட்டன்சத்திரம் பட்ஸ் பிளரிஷிங் ஹிந்து வித்யாலயா அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 68ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த வேடசந்துார் பெட்போர்ட் அகாடமி எம்.ஹெச்.எஸ்.எஸ் பள்ளி அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 72ரன்கள் எடுத்து வென்றது. ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா எம்.ஹெச்.எஸ்.எஸ். பள்ளி அணி 25 ஓவரில் 4 விக்கெட் இழந்து 119ரன்கள் எடுத்தது. தரணி 40 (நாட்அவுட்) ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் பார்வதிஸ் அனுகிரஹா சர்வதேச பள்ளி அணி 22 ஓவர்களில் 3விக்கெட் இழந்து 120ரன்கள் எடுத்தது. ஹரீஷ் 62(நாட்அவுட்)ரன்கள், மனிஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ