உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சின்னாளபட்டி சண்முகம் சர்ஜிகல், செயற்கை கருத்தரிப்பு மையமருத்துவமனை சார்பில் நடந்த 16 வயது பிரிவு ஸ்ரீமதி கோப்பை கிரிக்கெட் போட்டியில்திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி பெற்றது.பி.எஸ்.என்.ஏ. மைதானத்தில் நடந்த போட்டியில் பழநி யுவராஜ் எஸ்.வி.எம். அகாடமி அணி 28.3 ஓவரில் 64ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. விக்னேஷ் 3 விக்கெட் எடுத்தார்.சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 9.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65ரன்கள் எடுத்து வென்றது. தீபன் 30 (நாட்அவுட்) ரன்கள் எடுத்தார். ஸ்ரீ வீ. மைதானத்தில் நடந்த மகளிர் அணிகளுக்கான போட்டியில் சாய் புட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 30.2 ஓவரில் 62 ரன்கள் எடுத்துஆல்அவுட்டானது. ஐஸ்வர்யா 6 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த டி.டி.சி.ஏ. அணி 22.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 63ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய் சிவாஸ்ரீ 25ரன்கள் எடுத்தார்.ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த போட்டியில் வத்தலக்குண்டு ஜெயசீலன் மெம்., எம்.ஹெச்.எஸ்.எஸ்.அணி 43.3 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. நிதர்சின் 3 விக்கெட் எடுத்தார்.சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்சு கிரிக்கெட் அகாடமி அணி 24.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141ரன்கள் எடுத்து வென்றது. பிராஜன் 67(நாட்அவுட்)ரன்கள் எடுத்தார்.என்.பி.ஆர். மேட்டிங் மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 41.5 ஓவரில் 190ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. முகமது பஹீம் 61, தஷ்வின் 74(நாட்அவுட்)ரன்கள், கோபிநாத்பாண்டி 4 விக்கெட்எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் அணி 42.1 ஓவரில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கோபிநாத் பாண்டி 26ரன்கள், தனிஷ், ரிஷியந்த் தலா 3 விக்கெட் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி