திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிசன், ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3 வது டிவிஷன், மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிஷன் போட்டிகள் ஸ்ரீ.வீ., பி.எஸ்.என்.ஏ., என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்தது.திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 48 ஓவர்களில் 325/7. வினோத்குமார் 115, கார்த்திக்சரண் 55, விக்னேஷ் 37, ஆசிக் 36, சிவமுருகன் 25 ரன், சல்மான்கான் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., குழும சிசி அணி 16.1 ஓவர்களில் 54 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. அஜய்யோகேஷ் 4(ஹாட்ரிக்), சபரிநாதன் 3 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 50 ஓவர்களில் 327/7. கிேஷார்குமார் 104(நாட்அவுட்), சஞ்சய்வெங்டேஷ்வர் 52, முகமது அப்துல்லா 50, செபஸ்டின் 29, சூர்யா 28 ரன் எடுத்தனர். சேசிங் செய்த வசந்தா ஸ்வீட்ஸ் சிசி அணி 35.2 ஓவர்களில் 161 ஆல்அவுட் ஆகி தோற்றது. தமிழ்செல்வன் 39, பிராஜன் 35 ரன் எடுத்தனர். திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 48 ஓவர்களில் 313/8. நரேன்நிர்மல் 85(நாட்அவுட்), சிவமுருகன் 56, ஆசிக் 52, வினோத்குமார் 39 ரன், நாசர்உசேன் 4, கிேஷார்குமார் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த பழநி டாமினேட்டர்ஸ் சிசி அணி 32.5 ஓவர்களில் 167 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ஸ்ரீராம் வசந்த்பிரசாத் 39, சந்துருவிக்னேஷ் 36(நாட்அவுட்) ரன், கார்த்திக் சரண் 4 விக்கெட் எடுத்தனர். எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 136/7. அருண்பிரகாஷ்ராஜ் 35 ரன் எடுத்தார். சேசிங் செய்த பழநி யுவராஜ் சிசி அணி 19.5 ஓவர்களில் 140/5 எடுத்து வென்றது. துர்காபிரசாத் 51 ரன், பாண்டியராஜன் 3 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 24.2 ஓவர்களில் 114 க்கு ஆல்அவுட் ஆனது. அருண்பாண்டி 46 ரன், பூபதிராஜா 5, மனோகரன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த எரியோடு யங்ஸ்டர்ஸ் சிசி அணி 24.2 ஓவர்களில் 1158/ எடுத்து வென்றது. சண்முகசுந்தரன், பிரகலநாதன் தலா 3 விக்கெட் எடுத்தனர். கொடைரோடு கொடை சிசி அணி 24 ஓவர்களில் 91 க்கு ஆல்அவுட் ஆனது. தியகாராஜன், முகமதுஆசிக் தலா 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சிசி அணி 9.1 ஓவர்களில் 92/2 எடுத்து வென்றது. முகமதுஆசிக் 61 ரன் எடுத்தார். திண்டுக்கல் ஏஞ்சல்கேஸ்டர்ஸ் சிசி அணி 22 ஓவர்களில் 118 க்கு ஆல்அவுட் ஆனது. ரமேஷ் 31 ரன், திருப்பதி 6, மதேஷ் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 16.3 ஓவர்களில் 83 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ஜெகதீஷ் 5 விக்கெட் எடுத்தார்.