கிரிக்கெட் லீக்: வல்கனோ அணி வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் வல்கனோ ரைடர்ஸ் சிசி அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் ,பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டிகள் என்.பி.ஆர்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.முதலில் பேட்டிங் செய்த பழநி டாமினேட்டர்ஸ் அணி 22.4 ஓவர்களில் 129 க்கு ஆல்அவுட் ஆனது. நாசீர்ஹீசைன் 26, கார்த்திகேயன் 32, ராம்திலக் 8 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 25 ஓவர்களில் 130/1 என வெற்றி பெற்றது. சிவமுருகன் 82, சஞ்சய்பாலாஜி 37(நாட்அவுட்)திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 151/8. நவநீதகிருஷ்ணன் 47, வேல்முருகன் 25, அருண்குமார் 4 விக்கெட். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாமுராய் சிசி அணி 25 ஓவர்களில் 136/9 எடுத்து தோல்வியை தழுவியது. அசைன் 49, மகேஷ்பூபதி 31, ஜெயப்பிரகாஷ் 3 விக்கெட்.கொடைரோடு கொடை சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 138/7. ரிச்சர்ட்சன் 38, ராஜ்குமார் 4 விக்கெட். சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம் ஸ்டார் சிசி அணி 22 ஓவர்களில் 111 க்கு ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது.